fbpx
RETamil News

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் , இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்பகுதிகளில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி ,மற்றும் வெப்ப சலனமும் ஏற்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் , ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close