கர்நாடக முதல்வர் குமாரசாமி, முதல்வராக பணியேற்றதில் இருந்து கோவில் கோவிலாக சென்று வருகிறார். கடந்த இரண்டு நாட்களாக கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் சென்று வருகிறார்.
இந்நிலையில், அவர் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசிய சில கருத்துக்கள் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. அப்போது அவர், கர்நாடகாவில் நல்ல மழை பெய்து வருகிறது.
இதனால், காவிரியில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால், இதே போல எப்போதும் தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும் என தமிழக அரசு காவேரி மேலாண்மை வாரியத்திடம் மனு அளித்துள்ளது வியப்பாக இருக்கிறது.
தமிழக அரசின் கோரிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் நிராகரிக்க வேண்டும். தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடவா நாங்கள் அணை கட்டியுள்ளோம்.
அணைகள் கர்நாடக மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டது.
எங்களது தேவைகளுக்காக நாங்கள் அணை கட்டியுள்ளோம். தமிழக மக்களுக்கு தண்ணீர் திறந்துவிடவும், தமிழகத்தை காப்பாற்றவும் அணை கட்டவில்லை என கூறியுள்ளார்.
மேலும், மேகதாதுவில் அணை கட்ட கோரியுள்ளோம். அதற்கு அனுமதி கிடைத்தால் மாநிலத்தில் கூடுதல் தண்ணீர் சேகரித்து வைக்கமுடியும் என அவர் பேட்டியளித்துள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இன்னுமா தமிழா உனக்கு ரோஷம் வரவில்லை.பொறுத்தது போதும் பொங்கியெழு!