fbpx
Tamil News

ஜெயலலிதா அப்போல்லோவில் இருந்த 75 நாட்களின் சிகிச்சைகள் குறித்த சிசிடிவி காட்சிகளை ஏழு நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டும் – ஆறுமுகசாமி ஆணையம் அதிரடி!

சென்னை அப்பல்லோவில் ஜெயலலிதா 2016 -ம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் டிசம்பர் 5-ஆம் தேதி காலமானார்.

அவர் மரணத்தில் பலர் சந்தேகம் எழுப்பினர். இதனை தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையம் முன்னாள் தலைமை செயலாளர் உட்பட பலரிடமும் விசாரணை செய்தது.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில், அப்போலோ மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் இன்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம், நீதிபதி ஆறுமுகசாமி சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். செப்டம்பர் 22-ஆம் தேதி ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாளில் பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டதாக அப்போலோ நிர்வாகம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், நீர்ச்சத்து குறைபாட்டினால் தான் பாதிப்பு என செப்டம்பர் 23ஆம் தேதி அறிக்கை வெளியிட காரணம் என்ன? என்றும், அவ்வாறு அறிக்கை கொடுக்கச் சொன்னது யார்? என்றும் ஆறுமுகசாமி கேள்வி எழுப்பினார்.

பல கேள்விகளுக்கு அப்போலோ நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் மழுப்பாலகவே பதில் அளித்ததாக கூறப்படுகிறது. வேறு அறைக்கு மாற்றப்பட்டபோதும், சில பரிசோதனைகளுக்கு அழைத்துச் சென்ற போது மட்டுமே, சிசிடிவி பதிவுகள் நிறுத்தப்பட்டதாக சுப்பையா விஸ்வநாதன் கூறியிருக்கிறார். அப்பொழுது, சிசிடிவி காட்சி பதிவுகளை நிறுத்தச் சொன்னது யார்….? என நீதிபதி ஆறுமுகசாமி கேள்வி எழுப்பினார்… அதுபற்றி தமக்கு தெரியாது என சுப்பையா விஸ்வநாதன் பதில் அளித்தார். ஜெயலலிதா சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்ட செம்ப்டம்பர் 22-ஆம் தேதி முதல், உயிரிழந்த டிசம்பர் 5-ஆம் தேதி வரை, பதிவு செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகளை, இன்றிலிருந்து 7 நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டும் என்று அப்போலோ மருத்துவமனைக்கு, ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close