செல்போன் வாங்கித்தராததால் கல்லூரி மாணவி தீக்குளிப்பு!
இப்போதுல்ல காலகட்டத்தில் செல்போன் என்பது மிக அத்தியாவசிய பொருளாக உள்ளது.அதிலும் ஸ்மார்ட் போன் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிக விரும்பக்கூடியதாக உள்ளது. தற்போது அனைத்து சிறு குழந்தைகளுக்கும் பெற்றோர்கள் செல்போன் கொடுத்து பழகி வருகிறார்கள். அதன் விளைவாகத்தான் கல்லூரி படிக்கும் மாணவி ஒருத்தி தன் தந்தை செல்போன் வாங்கி தராததால் தீக்குளித்துள்ளாள்.
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பாஸ்கர் . கொத்தனார் வேலை சாய்த்து வருகின்றார்.அவரது மகள் மாலதி (18) கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வந்தால் .தற்போது அவர்கள் சென்னைகொளத்தூரில் உள்ள ஜிகேஎம் காலனியில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். மாலதி தன்னுடன் படிக்கும் தோழிகள் வைத்திருக்கும் ஸ்மார்ட் போன்போலவே தனக்கும் போன் வாங்கித்தருமாறு நீண்ட நாட்களாக தன் தந்தையுடம் கேட்டுவந்தால். அதற்கு அவள் தந்தை உன்னுடைய பிறந்த நாளில் வாங்கித்தருகிறேன் என்று கூறியிருந்தார். கடந்த வியாழக்கிழமை மாலதியின் பிறந்தநாள் ஆனால் சொன்னபடி மாலதியின் தந்தை அவளுக்கு செல்போன் வாங்கித்தரவில்லை.
அதனால் மனம் உடைந்த மாலதி நேற்றிரவு தனக்கு தானே தீ வைத்து கொண்டால். வலியால் துடிக்கும் சத்தம் கேட்ட அவளது பெற்றோர் மற்றும் உறவினர் அதிர்ச்சி அடைந்த நிலையில் கதவை உடைத்து உள்ளே சென்று மாலதியை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பே அவள் உயிர் பிரிந்துவிட்டது இது குறித்து கொளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.