fbpx
REதமிழ்நாடு

சென்னை பரங்கிமலையில் ரயிலிலிருந்து தவறிவிழுந்து பள்ளி மாணவர்கள் 4 பேர் பலி.. 3 பேர் கவலைக்கிடம்

சென்னை: பரங்கிமலையில் ரயில் படியில் தொங்கி சென்றபோது கீழே விழுந்து பள்ளி மாணவர் உட்பட 4 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டநெரிசல் காரணமாக படியில் தொங்கியவாறு பயணம் செய்தபோது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் மின்கம்பி அறுந்ததால் கடற்கரை- திருமால்பூர் இடையேயான ரயில் சேவை தாமதமானதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து விரைவு ரயில்கள் செல்லும் பாதையில் லோக்கல் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே ரயில்கள் தாமதத்தால் ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் இருந்துள்ளது.

இதன் காரணமாக தாமதமாக வந்த கடற்கரை – திருமால்பூர் ரயிலில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

கூட்டம் அதிகமாக இருந்ததால் பயணிகள் ரயில் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்துள்ளனர்.

ரயில் பரங்கி மலை ஸ்டேஷனில் இருந்து புறப்பட்டபோது படியில் தொங்கியவர்கள் பக்கவாட்டு சுவரில் மோதியுள்ளனர். இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

பலியானவர்கள் சங்கர், சிவக்குமார், பரத், பிரவீன் என்பது தெரியவந்துள்ளது.

இதில் பரத் பள்ளி மாணவர் என்பதும் ஜெய்கோபால் கரோடியா பள்ளி மாணவர் என்பதும் தெரியவந்துள்ளது.

பிரவீன் குமார் கல்லூரி மாணவர் என தெரியவந்துள்ளது. உயிரிழந்த 4 பேரில் 2 பேரின் தலைகள் துண்டாதாக கூறப்படுகிறது.

காயமடைந்த 3 பேர் கவலைக்கிடமான நிலையில் குரோம்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் மூர்த்தி என்பவருக்கு 2 கால்களும் துண்டானது. கூட்ட நெரிசல் காரணமாக படியில் பயணம் செய்தபோது நடைமேடை பக்கவாட்டு சுவரில் அடிபட்டு இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

விரைவு ரயில்கள் இயக்கப்படும் ட்ராக்கில் கூட்டல் நெரிசல் மிகுந்த லோக்கல் ட்ரெயின்கள் இயக்கப்பட்டதே 4 உயிர்கள் பறிபோக காரணம் என  பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

நேற்றிரவும் பரங்கிமலை ரயில் நிலையத்தில் 2 பயணிகள் உயிரிழந்தனர்.

இதனிடையே சம்பவ  இடத்திற்கு நேரில் ஆய்வு செய்த ரயில்வே ஏடிஜிபி சைலேந்திரபாபு விபத்திற்கு காரணமான ரயில் நிலைய பக்கவாட்டு சுவரை இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close