fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

சென்னையில் போலீஸ் அடக்குமுறையுடன் தேவாலயம் இடிப்பு

சென்னை அண்ணாநகரில் உள்ள 50 ஆண்டு கால பழமையான தேவாலயம் போலீஸ் அடக்குமுறையுடன் இன்று இடித்து தகர்க்கப்பட்டு வருகிற சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அண்ணா நகரில் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் தேவாலயம் மற்றும் அதை சுற்றியுள்ள குடியிருப்புகள் இடித்து தகர்க்கப்பட்டு வருகிறது.

எந்த முன்னறிவிப்பும் இன்றி இந்த சம்பவம் அரங்கேறியதாக பொதுமக்கள் பெரும் வேதனை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் போலீஸ் உதவியுடன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாக மக்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக விளக்கம் கேட்ட தேவாலய போதகர் மற்றும் சபை மக்களை போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

சபை மக்களின் எதிர்ப்பை மீறியும் தேவாலயத்தை இடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது

இதில் வேதனை அடைந்த மக்கள் சிலர் இங்கு நடப்பது அதிமுக ஆட்சியா?.. அல்லது பாஜக ஆட்சியா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close