RETamil Newsஅரசியல்தமிழ்நாடு
சென்னையில் பிரியாணி கடைக்காரர்களை தாக்கிய திமுகவைச் சேர்ந்த யுவராஜ் மீது குண்டர் சட்டம்
சென்னையில் பிரியாணி கடை மேலாளரை தாக்கிய திமுகவைச் சேர்ந்த யுவராஜ் உள்ளிட்ட 11 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பிரியாணி கடைக்கு சில தினங்களுக்கு முன்பு சென்ற திமுகவை சேர்ந்த இளைஞர்கள் அங்கு பிரியாணி கேட்டுள்ளனர்.
அப்போது பிரியாணி தீர்ந்துவிட்டதாக கடை உரிமையாளர் கூறியதால் ஆத்திரமடைந்த திமுகவினர் கடை மேலாளரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
கடை மேலாளரை தாக்கும் cctv காட்சிகள் சமூகவலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதை தொடர்ந்து யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் 11 மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.