சுவைமிகுந்த உருளைக்கிழங்கு போண்டா !
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 4-5 நடுத்தர அளவு
வெங்காயம் – 1 பெரிய வெங்காயம்
பச்சை மிளகாய் – 1-2 பொடியாக நறுக்கியது
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
எண்ணெய் – 2 தேக்கரண்டி
முந்திரி பருப்புகள் -5-6 வெட்டப்பட்டது
கடுகு விதைகள் – 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள்
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை நறுக்கியது
கடலை மாவு – 3/4 கப்
அரிசி மாவு – 1/4 கப்
சிவப்பு மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
சமையல் சோடா அல்லது பேக்கிங் சோடா – ஒரு சிட்டிகை
எலுமிச்சை சாறு 1/2 டீஸ்பூன்
தண்ணீர் தேவையான அளவு
எண்ணெய் பொரித்தெடுக்க
செய்முறை:
உருளைக்கிழங்கை குக்கரில் 4 விசில் போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கின் மேலிருக்கும் தோலினை நீக்கிவிட்டு மசித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
வெங்காயம், பச்சைமிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்க்கவும். நறுக்கி வைத்துள்ள முந்திரி பருப்பை போட்டு பொன்னிறமானதும் எடுத்து வேறு தட்டில் வைக்கவும். அதன்பின், கடுகு போட்டு அது பொரிந்ததும், அதனுடன் வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கி கொள்ளவும். பொன்னிறமானதும் அதனுடன் மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும். மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு, வறுத்து வைத்துள்ள முந்திரி அகியவற்றை சேர்த்து நன்றாக கிளறவும். 5 நிமிடம் கழித்து உருளைக்கிழங்கு மசாலா தயாரானதும் வாணலியை இறக்கி விடவும். கொத்துமல்லி தழை, 1/2 டீஸ்பூன் லெமன் சாறு சேர்க்கவும்.
இதனை தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், உப்பு, பெருங்காயத்தூள், சமையல் சோடா சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவேண்டும். போண்டா மாவு கட்டியாகவும் இருக்க கூடாது, மிகவும் நீர்த்தும் இருக்க கூடாது. சரியான பதத்தில் இருக்க வேண்டும்.
உருளைக்கிழங்கு மசாலாவை ஒரே அளவாக உருண்டை பிடித்து கொள்ளவேண்டும். பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவைக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும், கடலை மாவில் முக்கி எடுத்த உருளைக்கிழங்கு மசாலாவை போட்டு பொரித்தெடுக்கவும். ஒரே நேரத்தில் 3-4 உருண்டைகளை போடலாம். ஒரு பக்கம் நன்றாக வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட வேண்டும். போண்டா பொன்னிறமாக மாறியதும் எடுத்து விடலாம்.
சுவையான உருளைக்கிழங்கு போண்டா தயார். இதனை தேங்காய் சட்னியுடன் தொட்டு சாப்பிடலாம்.