சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் – தமிழக அரசு கொள்கை முடிவு
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.
சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பாக தமிழக எல்லைக்கு விசாரணை நடத்திட சிபிஐக்கு அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு.
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவை எடுத்ததாக நேற்று அரசு வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கை ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரிக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆரம்பம் முதலே ஐ.ஜி.பொன்.மாணிக்கவேலின் விசாரணைக்கு தமிழக அரசு பல தடைகளை செய்து வந்தது ஆனால் அவர் உயர்நீதிமன்ற உதவியுடன் இந்த விசாரணையை தொடர்ந்து செய்து வந்தார்.
இந்நிலையில் ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் தலைமையிலான குழுவை இதில் இருந்து விளக்க இதில் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது.
ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் இந்த விசாரணையை தொடர்ந்தால் பல பெரும் புள்ளிகள் இதில் மாட்டுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பாணை யாருக்கு சாதகம் என சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.