
திருப்பதி கோயிலில் பக்தர்களை அனுமதிக்காதது, சுரங்கம் தோண்டி நகையையும் பணத்தையும் கொள்ளை அடித்து கொண்டு போகவா? என்று நடிகை ரோஜா சந்தேகம் தெரிவித்தள்ளார்.
ஆந்திராவின் நகரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், நடிகையுமான ரோஜா, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏழுமலையான் கோயிலின் கும்பாபிஷேகத்திற்கு பக்தர்கள் யாருக்கும் அனுமதி கிடையாது என்று தேவஸ்தானம் கூறியுள்ளது ஏற்புடையது அல்ல என தெரிவித்தார்.
1994, 2006ஆம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடைபெற்றபோது பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர் எனவும் கூறினார்.
தற்பொழுது யாரையும் அனுமதிக்க முடியாது என்றும் ,சிசிடிவி கேமராக்களையும் அணைத்து விடுவோம் என தெரிவித்திருப்பது,
கோயிலுக்குள் திருட்டு சம்பவங்கள் நடைபெற உள்ளதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
கும்பாபிஷேகம் நடைபெறும் போது பக்தர்களை அனுமதிக்காவிட்டால், பக்தர்களை திரட்டி கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் எனவும் ரோஜா கடும் எச்சரிக்கை விடுத்தார்.