கொரோனா வைரஸ் ; “ஊரடங்கு தேவையில்லை” அமெரிக்காவில் போராட்டங்கள் வெடிப்பு – அதிபர் டிரம்ப் ஆதரவு

உலகையே இன்று கொரோனாவைரஸ் என்ற நோய் தொற்றால் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பல நாடுகளில் இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இந்த ஊரடங்கிற்க்கு எதிராக அமெரிக்காவில் சில பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டங்களுக்கு அந்நாட்டு அதிபரான டொனால்டு டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்த ஊரடங்கின் காரணமாக ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார கட்டுப்பாடுகள் குடிமக்களை பெரிதும் பாதிக்கின்றன என அப்போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.ஆனால் அவற்றை தளர்த்தினாள் தொற்றுநோய் அதிகரிக்கக்கூடும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கின்றன.
கொரோனா பாதிப்பில் முதலில் இருந்த இத்தாலியையும் முந்திய அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,591-ஆக உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 33 ஆயுரத்தையும் தாண்டியுள்ளது.
மேலும் இந்த தொற்று பாதிக்கப்பட்டவர்கள் 7 லட்சத்தை எட்டுவதாக ஜான் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
வடகலிபோர்னியா , மிக்சிகன் , ஓஹியோ , உட்டா , வெர்ஜினியா உள்ளிட்ட நாடுகளில் தொடக்கநிலை திரும்ப பெற வேண்டும் என்பதற்க்கு போராட்டங்கள் நடைபெற்றது.

இந்த போராட்டமானது அமெரிக்காவில் ஜனநாயக கட்சியினர் ஆளும் மாகாணங்களிலேயே நடக்கிறது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அடுத்த திட்டம் என்னவாக இருக்கும் ?
அமெரிக்காவில் இயல்புநிலை மீண்டும் திரும்ப அந்நாட்டு அரசாங்கம் சில திட்டங்களை வைத்துள்ளது. மூன்று கட்டங்களாக வர்த்தகம் மீண்டும் துவங்கும்.சமூக இடைவெளி மற்றும் சில சுகாதார நடவடிக்கைகளுடன் அலுவலகங்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.
ஊழியர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் உடல்நிலையை பராமரிக்கும் பல்வேறு பரிசோதனை திட்டங்களும் அதில் அடங்கும்.
எதற்காக மக்கள் போராட்டம் நடத்துகின்றனர் ?

வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதே இந்த போராட்டம் தீவிரம் அடைய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார் . ஒன்று மக்கள் அனைவரும் தங்கள் அலுவலக பணிக்கு திரும்பவேண்டும் , இல்லை கொரோனா வைரஸை குணப்படுத்த மருந்தை தயாரிக்க வேண்டும் என கூறுகிறார்.
இந்நிலையில் இந்த கட்டுப்பாடுகள் தொடர்ந்தால் பொருளாதாரம் ” அழியும் நிலைக்கு சென்றுவிடும்” என போராட்ட குழுவினர்கள் கூறுகின்றனர்.















