கேரளா ; உதவிக்கு காத்திருக்கும் மக்கள் ; கைகொடுத்து உதவுங்கள்!
கேரளாவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத கன மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டதுடன். மண் சரிவாழும் , வெள்ளத்தாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 39 -ஆக உயர்ந்துள்ளது. மேலும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 5-ஆகவும் , காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 21-ஆகவும் உயர்ந்துள்ளது.
முகாம்கள் ;
கன மழையால் இடுக்கி, வயநாடு , மலப்புரம் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது எனவே வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ராணுவம், கடற்படை , விமானப்படை என அனைத்து தரப்பு வீரர்களும் களம் இறங்கி உள்ளனர். அவர்களை அங்கிருந்து மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தொற்று நோய் பரவாமல் இருக்க மருத்துவ சிகிச்சியும் வழக்கபடுகின்றது.
மேலும் பெண்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களும் உடனடியாக வழக்கப்பட்டு வருகின்றது.
இடுக்கியை போன்றே வயநாடும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது .அங்குள்ள 3000-க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். வீடுகள் மட்டும் அல்லாமல் சாலைகளும் மிக மோசமாக பாதிக்கபட்டுள்ளதாக கேரளமுதல் வரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு சேதம் அடைந்துள்ள அனைத்தயும் கணக்கிட்டு பார்க்கும் பொது இழப்பீட்டின் அளவு ரூ.8,316 கோடியாகும்.
இதுவரை இல்லாத பாதிப்பு ;
கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் 10 மாவட்டங்கள் மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது. 1924-ஆம் ஆண்டிற்கு பிறகு கேரளா எதிர் கொள்ளும் ஓர் மிகப்பெரிய பேரிடர் ஆகும். அதனால் பல்லாயிரம் கணக்கான மக்கள் வீடுகளையும் , விலை நிலங்களையும், உடைமைகளையும் இழந்துள்ளதால் பல்வேறு நாடுகளில் இருந்து நிவாரண பொருட்களும், உதவி தொகையும் வந்தடைகின்றது.