கேரளாவில் எலிக்காய்ச்சல் அதிகரிப்பு ; தமிழகத்திலும் பரவும் அபாயம்!
கேரளாவில் கடந்த மாதம் காண மழையாலும் , வெள்ளத்திலும் பலர் உயிரிழந்தநிலை உருவானது.
தற்போது அங்கு மழை விட்டு 15 நாட்களாக வெயில் கொளுத்துகிறது. இந்நிலையில் அங்கு எலி காய்ச்சல் அதிகரித்து உயிரையே எடுத்து வருகின்றது.
அந்த எலிக்காய்ச்சலுக்கு இது வரை கேரளாவில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களிலும் இந்த நோய் பரவாமல் இருக்க மாநில சுகாதாரத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை எடுத்து வருகின்றது.
அதன் அடிப்படையில் தமிழக எல்லைப்பகுதியுள் மருத்துவ முகாமிட்டுள்ளனர். இதன் மூலம் கேரளாவிலிருந்து வருபவர்களையும், தமிழகத்திலுருந்து கேரளாவிற்கு செல்பவர்களையும் முழுமையாக பரிசோதனை செய்த பிறகுதான் அனுமதிக்கின்றனர்.
அவ்வாறு யாருக்காவது காய்ச்சல் இருந்தால் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.