குழந்தைகள் பசும்பால் அருந்துவதால் கிடைக்கும் பலன்கள் !
குழந்தைகளுக்கு ஒரு வயது முழுமையாக பூர்த்தியான பிறகே பசும்பால் கொடுக்க வேண்டும். அதுவரைக்கும், உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் அல்லது புட்டிப்பாலுடன் குழந்தைகளுக்கான திட உணவும் சேர்ந்து கொடுக்க வேண்டும்.
குழந்தைக்கு ஒரு வயது ஆனதும் பசும்பால் கொடுக்க ஆரம்பிக்கலாம். பசும்பாலில் சிறந்த ஊட்டச்சத்துகள் உள்ளன. இது உடலை வலிமையாக்க உதவுகிறது. அதிலும் இதில் சிறந்த புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் மற்றும் ஜிங்க் ஆகியவை உள்ளதால் குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைக் கொண்டுள்ளது.
பசும்பாலில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை அடங்கியுள்ளன. இது குழந்தையின் உடலில் கால்சியம் உறிஞ்சப்படுவதற்கு உதவுகிறது. மேலும் வாழ்க்கையின் பிற்காலங்களில், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் புற்றுநோய் போன்ற ஆபத்துகளை வரவிடாமல் பாதுகாக்கிறது.
பசும்பாலில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இது உங்கள் குழந்தையின் பல் மற்றும் எலும்புகளை வலிமையாக்குகிறது.
குழந்தைகள் வளரும் வயதில் அவர்களுக்கு போதுமான அளவு புரோட்டின் மற்றும் கார்போஹைடிரேட் தேவை. இதனை பசும்பால் மூலமாக குழந்தைகளுக்கு வழங்கலாம்.
குழந்தைகளுக்கு அதிகளவில் பசும்பால் கொடுக்காமல் ஒரு நாளைக்கு 2 கப் என்ற அளவில் துவங்கலாம். வயதிற்கேற்றவாறு அளவினை அதிகரித்து கொள்ளலாம்.