fbpx
RETamil Newsஇந்தியா

‘கி கி சவால் ‘ நடனத்தை ஓடும் ரயிலில் ஆடியதால் ; நீதிமன்றம் வழக்கியது வினோத தண்டனை!!

மும்பை ரயிலில் கி கி சவால் நடனத்தை ஓடும் ரயிலில் ஆடி அதை யூடியூபில் வெளியிட்ட 3 இளைஞர்களை மகாராஷ்ர போலீஸ் கைது செய்தனர்.மேலும் கைது செய்யப்பட்ட அவர்களுக்கு அந்த நீதிமன்றம் வினோத தண்டனை கொடுத்துள்ளது.

கி கி சவால் நடனம் என்பது கனடா நாட்டை சேர்ந்த ராப் பாடகரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நடனம் எப்படி என்றால் , ஓடும் காரிலிருந்து இறங்கி பாடலுக்கேற்ற நடனம் செய்து மீண்டும் காரிலேயே ஏறுவதாகும்.

இவ்வாறு கி கி சவால் நடனத்தை பல்வேறு மாநில இளைஞர்கள் செய்து உயிரையும் இழந்துள்ளனர் . அதனால் இந்த நடனம் செய்பவர்களின் மேல் வழக்கும் பாயும்,தண்டனையும் வழங்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை செய்திருந்தனர்.

எனினும் மகாராஷ்ர மாநிலத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் இந்த கி கி சவால் நடனத்தை ஓடும் ரயிலில் ஆடி வீடியோ பிடித்து அதை யூடியூபில் பதிவு செய்தனர். அந்த வீடியோ பதிவை ஒரு வாரத்தில் 1.50 லட்சம் மக்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

இந்த வீடியோ ரயில்வே அதிகாரிகளின் பார்வைக்கு சென்றது, அவர்கள் உடனே அந்த 3 இளைஞர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் ரயில்வே நீதிமன்றத்தில் ஆஜர் செய்து அவர்கள் செய்த குற்றத்தை கேட்ட நீதிபதி அவர்களுக்கு வினோத தண்டனை கொடுத்தார்.

அவர் கொடுத்ததண்டனை என்னவென்றால் ; எந்த ரயில் நிலையத்தில் அவர்கள் கி கி சவால் நடனத்தை ஆடினார்களோ அதே ரயில் நிலையத்தை காலையிலும் , மாலையிலும் சுத்தம் செய்து , அப்படியே இந்த கி கி சவால் நடனம் பற்றிய விழிப்புணர்வும் மக்களிடையே செய்ய வேண்டும் என்று கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close