fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

ஒரு வழியாக அ தி மு க சார்பில் தொலைக்காட்சி தொடங்கப்படுகிறது நியூஸ் ஜெ!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக வை விட்டு சசிகலா குடும்பம் ஒதுக்கிவைக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவும், ஓ. பன்னீர்ச்செல்வம் துணை முதலமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர்.

இதற்கிடையே, அ.தி.மு.க-வின் செய்தித்தாளாக இருந்துவந்த ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழ் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டாலும், அந்த நாளிதழின் வெளியீட்டாளர் என்ற பொறுப்பு சசிகலாவிடம் தான் இருந்தது.

அதேபோல, ஜெயா டி.வி-யும் சசிகலாவின் உறவினர்கள் பெயர்களில் பதிவுசெய்யப்பட்டு அவர்கள் கட்டுப்பாட்டில் தான் இருந்து வருகிறது.

சசிகலா சிறைக்குச் சென்றபிறகு, இதனை அவர்களது உறவினர்கள் கவனித்து வருகின்றனர்.

 

அதிமுக-விற்கென தனி செய்தித்தாள் மற்றும் செய்தி சேனல் தொடங்கவேண்டுமென்று எடப்பாடி பழனிசாமியும், பன்னீர் செல்வமும் திட்டமிட்டனர்.

அதன்படி ‘நமது அம்மா’ என்ற நாளிதழ் சமீபத்தில் தொடங்கியது. இதனை தொடர்ந்து செய்திச் சேனல் தொடங்கப்படவுள்ளது.

இதற்கு  ‘நியூஸ் ஜெ’ எனப் பெயரிட்டுள்ளனர். சேனல் தொடங்குவதற்கான வேலைகள் மும்மராக நடந்து வருகிறது.

இதற்கிடையே, சேனல் தொடங்குவதற்கு முன்பாக  ‘நியூஸ் ஜெ’ லோகோ, மொபைல் ஆப் மற்றும் வெப்சைட் வெளியிடப்படவுள்ளது.

இதற்கான தொடக்க விழா வரும் 12ம் தேதி நடைபெறவுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் அன்று மாலை 6 மணிக்கு விழா நடைபெறவுள்ளது.

முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இதனைத் தொடங்கி வைக்கின்றனர்.

Related Articles

Back to top button
Close
Close