எளிய சுவையான முறுக்கு ரெசிபி !
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி -2 1/2 கப்
பொட்டு கடலை – 1 1/4 கப்
எண்ணெய் – 1/3 கப்
சீரகம் – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 6-7 நடுத்தர அளவு
தேவையான அளவு உப்பு
முறுக்கு வறுத்தெடுக்க தேவையான அளவு எண்ணெய்
செய்முறை:
புழுங்கல் அரிசியை 2 மணிநேரம் தண்ணீரில் ஊர வைக்க வேண்டும். பிறகு கிரைண்டரில் ஊற வைத்த அரிசியை மாவு பதத்திற்கு அரைக்கவும். அதனுடன் பச்சைமிளகாய் சேர்த்து அரைக்க வேண்டும்.
தண்ணீர் அதிகமாக சேர்க்க வேண்டாம். கெட்டியான பதத்திற்கு அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
பொட்டு கடலையை பவுடர் பதத்தில் அரைத்து வைத்து கொள்ள வேண்டும்.
அரைத்து வைத்துள்ள அரிசி மாவு + வறுத்த கிராம் பவுடர் + உப்பு + சீரகம் விதைகள் ஒன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.
1/3 கப் எண்ணெய் கொதிக்க வைத்து அரிசி மாவு கலவையுடன் சேர்த்து கொள்ளவேண்டும்.
தயார் செய்து வைத்துள்ள மாவை முறுக்கு குழாயில் இட்டு பிழிய வேண்டும். நமக்கு விருப்பமான முறுக்கு தட்டினை (3 ஸ்டார் வடிவம் அல்லது தேன்குழல் வடிவம் ) தேர்வு செய்து கொள்ளவும். ஒரு தட்டின் மீது முறுக்கு பிழிந்து வைத்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது காய்ந்ததும் பிழிந்து வைத்துள்ள முறுக்கு மாவை சேர்த்து வறுக்கவும். ஒரே நேரத்தில் 3-4 முறுக்கு தயார் செய்யலாம். சிறிது பொன்னிறமானதும் திருப்பி போட்டு இரண்டு பக்கமும் நன்றாக வெந்ததும் எடுத்து விடலாம்.
சுவையான மிகவும் சுலபமான முறுக்கு தயார்.