எம்எல்ஏவான தனக்கே பிரச்சனைகள் வரும்போது சாதாரண மக்கள் எந்த அளவு பாதிக்கப்படுகிறார்கள் ?- கருணாஸ் கேள்வி!
முக்குலத்தோர் சமுதாய மக்களை தமிழகம் முழுவதும் போலீசார் தாக்குவதாகவும், எம்எல்ஏவான தனக்கே பிரச்சனைகள் வரும்போது சாதாரண மக்கள் எவ்வளவு பாதிக்கப்படுவார்கள் என்றும் கருணாஸ் கேள்வி எழுப்பினார்.
நான் பேசிய வீடியோவை முழுமையாக பார்த்தால் அதில் தவறும் ஏதும் இல்லை என புரியும் என்று நடிகரும், திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், “சாமி, சிங்கம் போன்ற படங்களை பார்த்துவிட்டு அதே போல் சில காவல்துறை அதிகாரிகள் நடந்து கொள்கிறார்கள்.
அவர்களுக்கு உயர் அதிகாரிகள் ஆலோசனை வழங்க வேண்டும். நான் சட்டமன்றத்திலேயே பேசியவன்.
உங்களுக்கு போதை ஏற்றினால் தான் கொலை செய்ய துணிச்சல் வரும். ஆனால் நாங்கள் தூங்கி எழுந்து பல் துலக்கும் நேரத்தில் கொலை செய்து விடுவோம்” என்று பேசினார்.
மேலும் தமிழக முதல்வர் பற்றியும் விமர்சித்த கருணாஸ், கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டது குறித்தும் பேசினார்.
கருணாஸின் இந்த அவதூறு பேச்சால் தமிழக காவல்துறை அதிகாரிகள் கருணாஸ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சாதாரண தலைவர்களுக்கு அளிக்கும் பாதுகாப்பு கூட தனக்கு வழங்கவில்லை என்றும் வருத்தம் தெரிவித்தார். சாதி ரீதியில் தன் மீது தாக்குதல் நடக்கும் என்பதாலேயே தொகுதிக்கும் தாம் செல்லவில்லை என்றும் அவர் கூறினார்.