Tamil News
எத்தனை சுனாமி வந்தாலும் தங்கள் இருவரின் ஒற்றுமையை அசைக்க முடியாது ஓ. பன்னீர்செல்வம்
எந்த பக்கமிருந்து எத்தனை சுனாமி வந்தாலும் தங்கள் இருவரின் ஒற்றுமையை யாராலும் அசைத்து கூட பார்க்க முடியது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
அதிமுக நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழா புதுக்கோட்டையில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
விழா மேடையில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செம்மையாக செய்து வருவதாகக் கூறினார். “எந்த பக்கமிருந்து எத்தனை சுனாமி வந்தாலும் தங்கள் இருவரின் ஒற்றுமையை அசைக்க முடியாது” என்றும் தெரிவித்தார்.