RETamil Newsஇந்தியாதமிழ்நாடு
உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்
தமிழ் வழியில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி TK.ரங்கராஜன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் தவறுதலாக மொழிபெயர்க்கப்பட்ட கேள்விகளுக்காக 196 மதிப்பெண்களை கூடுதலாக வழங்க சிபிஎஸ்இக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்துள்ளது.
அதேவேளையில் இந்த வழக்கில் தனது வாதத்தையும் கேட்க வேண்டும் என வலியுறுத்தி TK.ரங்கராஜன் உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.