fbpx
Tamil News

“உணர்ச்சிவசப்பட்டு வாய்தவறி பேசிவிட்டேன்” என மன்னிப்பு கோரும் எச். ராஜா

காவல்துறை  குறித்தும், நீதிமன்றத்தை குறித்தும் அவதூறாக பேசிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரான பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா, மன்னிப்பு கோரினார்.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நீதிமன்றம் மற்றும் காவல்துறை  குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தரக்குறைவாக பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் சி.டி செல்வம், நிர்மல் குமார் அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக தாமாகவே முன்வந்து விசாரித்தனர். எச்.ராஜாவை நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டனர்.

நீதிபதிகளின் உத்தரவின்படி, இன்று உயர் நீதிமன்றத்தில் ஆஜரான எச்.ராஜா, “உணர்ச்சிவசப்பட்டு வாய்தவறி பேசிவிட்டேன்” எனக்கூறி நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக மனுத்தாக்கல் செய்தார்.

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மன்னிப்பு கோரியதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

மேலும் சர்ச்சை பேச்சு வீடியோ வெளியான மறுநாள் தான் பேசவில்லை எனவும், வீடியோ எடிட் செய்யப்பட்டது எனவும் எச்.ராஜா கூறியிருந்தார், இன்று மன்னிப்பும் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close