இந்திய ரூபாய் மதிப்பின் தொடரும் வீழ்ச்சி!!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் இன்று சென்செக்ஸ் புள்ளிகளும் சரிந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து கொண்டே உள்ளது. இதன் காரணமாக அமெரிக்க டாலருக்கு மதிப்பு அதிகரித்து வருவதாலும் , அதனால் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதனால் தான் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இன்று காலை ரூ.72.30-ஆக இருந்த அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு , மதியம் சுமார் 3 மணியளவில் ரூ.72.70-ஆக இருந்தது.
கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவது, சமன் இல்லாத உலக பொருளாதாரம் , சீத்தோஷன நிலை மாற்றம் ஆகியவற்றை இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணமாக மத்திய அரசு கூறுகின்றது. இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் ரூ.75 வரை வீழ்ச்சி அடையலாம் என்று கருதப்படுகின்றது.