fbpx
HealthTamil News

இதயநோயிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள !

இதயநோய் பொதுவாக ஆண், பெண் பேதமின்றி இருபாலருக்கும் ஏற்படுகிறது. முன்பெல்லாம் நடுத்தர வயதைக் கடந்தவர்களை தாக்கிய இதய நோய் இப்போது இளைஞர்களையும் தாக்குகிறது.

இதயநோயிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள செய்யவேண்டியவை :

கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்தல் மாரடைப்புக்கு வழிவகுத்துவிடும். சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். தக்காளி, எண்ணெய்யில் வறுக்கப்படாத உருளைக்கிழங்கு, சிட்ரஸ் பழங்கள், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

உடல் எடை விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும். அதிக உடல் எடை கொழுப்பின் அளவை அதிகப்படுத்திவிடும். உடல் எடையை சீராக பராமரித்து வருவது ரத்த அழுத்தத்தை சீர் செய்யும். இதய நோய் ஏற்படாமல் தடுக்கும்.

உடற்பயிற்சி செய்து உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சிக்காக தினமும் 30 நிமிடமாவது ஒதுக்க வேண்டும்

பொதுவாக ரத்த அழுத்தம் 120/80 மி.மீ பாதரச அளவுதான் இருக்க வேண்டும். அதிக பட்சமாக 130/85 என்ற அளவில் இருக்கலாம். இந்த அளவில் மாற்றங்கள் அதிகரிக்க தொடங்கினால் உடனடியாக உணவு, வாழ்க்கை முறைகளில் மாற்றம் செய்து கொள்வது நல்லது.

இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு உணவு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதிலும் இதய நோய்க்கான ஆரம்ப கட்ட அறிகுறிகள் தெரியவந்தால் மேலும் கவனமாக இருப்பது அவசியம். மாமிச உணவுகள், தேங்காய் பதார்த்தங்கள், அதிக அளவு சோடியம், இனிப்பு கலந்த உணவு பொருட்கள், துரித உணவுகள், வறுத்த உணவு பதார்த்தங்கள், எண்ணெய்யில் தயாரிக்கப்பட்ட நொறுக்கு தீனிகள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பதார்த்தங்கள் உள்ளிட்டவற்றை தவிர்ப்பது நல்லது.

புகைப்பிடித்தல் மற்றும் புகையிலை பழக்கம் இதயநோய் பாதிப்புக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. சுவாசத்திற்கும், இதயத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சிகரெட்டில் இருந்து வெளிப்படும் புகையில் சுவாசிக்கும் பிராணவாயுவான ஆக்சிஜனும் அதிக அளவு வெளிப்படும். அப்பொழுது ரத்தத்தில் கலந்திருக்கும் ஆக்சிஜன் அளவு குறைபடும். அதனை ஈடுகட்ட இதயம் வேகமாக துடிக்கும். இதயத்தின் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் புகைப்பழக்கத்தை விட்டொழிப்பது அவசியம்.

Related Articles

Back to top button
Close
Close