fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

ஆல் அவுட் கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார் டிவி நடிகை நிலானி

கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார் டிவி நடிகை நிலானி. அவர் இப்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ளார்.

நடிகை நிலானியை திருமணம் செய்ய விரும்பிய உதவி இயக்குனர் காந்தி லலித்குமார், சில நாட்களுக்கு முன் கேகே நகர் பகுதியில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் நடிகை நிலானியும் காந்தி லலித்குமாரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், நடிகை நிலானியின் காலில் காந்தி லலித்குமார் மெட்டி அணிவிக்கும் வீடியோ போன்றவை சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.

இதனையடுத்து சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த நிலானி, காந்தி லலித்குமார் தற்கொலைக்கு நான் காரணமல்ல என கூறியுள்ளார் . காந்தியை திருமணம் செய்ய முடிவு செய்திருந்தேன் ஆனால் காந்தி குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி என்னிடம் இருந்து அதிக பணம் வாங்கிகொண்டு செலவு செய்ததால் அவரை விட்டு ஒதுங்கினேன். மேலும் நானும் காந்தியும் நெருக்கமாக இருக்கும் படங்களை வேண்டுமென்றே சமூகவலைதளங்களில் பரப்புகின்றனர். போட்டோக்களை வெளியிட்டு அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை நிலானி தனது மனுவில் கோரிக்கை விடுத்தார்.

காந்தியின் சகோதரர் ரகுகுமார் என்பவர் தன்னுடைய தம்பியின் மரணத்திற்கு முழு காரணம் நிலானி தான், தன்னுடைய தம்பியின் மீது நிலானி தவறான புகார் கொடுத்ததால், காந்தி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். அவரின் தற்கொலைக்கு முக்கிய காரணம் நிலானி மட்டுமே. மேலும், நிலானிக்கு குடி பழக்கம் உள்ளது. நிறைய ஆண்களுடன் தொடர்பும் உள்ளது விரைவில் இது குறித்து ஆதாரத்தை வெளியிடுவேன் என கூறி இருந்தார்.

இந் நிலையில் ஆலப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில், ஆல் அவுட் கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். மருந்தை குடித்ததும் மயக்கமாகி உள்ளார். அவரது இரண்டு குழந்தைகளும் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளனர். குழந்தைகளின் அழுகை சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் நடிகை நிலானியை கே.கே.நகர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close