அழகுக் குறிப்புகள்
நெல்லிக்காயுடன் பப்பாளி கலந்து முகத்தில் தடவினால் என்ன மாயம் நடக்கும் தெரியுமா?
நெல்லிக்காய் ஒருதங்கத்திற்கு சமம் என்று சொல்வரகள். உடலுக்கு அத்தனை நல்லது.
அதிலுள்ள விட்டமின் சி மற்றும் மிக சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்டுகள் முதுமையை தடுப்பதோடு, செல்களின் புத்துணர்வுக்கு உதவுகிறது. செல் சிதியவினால் உண்டாகும் பல நோய்கள் இதனால் தடுக்கப்படுகின்றன.
எப்படி உணவாக நெல்லிக்காய் சாப்பிடுவது நல்லதோ, அது போல், அதனை முகத்திற்கும் மற்றும் கூந்தல் வளர்ச்சிக்கும் அற்புதங்கள் செய்கின்றன.
நெல்லிக்காயை மற்ற பொருட்களுடன் காம்பினேஷனில் கலந்து முகத்தில் தடவும்போது கூடுதல் அழகு மிளிரும். சுருக்கங்கள் மறையும். முகம் பளிச்சிடும். இளமையாக முகத் தோற்றம் உண்டாகும் என்பதில் சந்தேகமில்லை. அப்படி நெல்லிக்காயை எப்படி பயன்படுத்தலாம் எனப் பார்க்கலாம்.
நெல்லிக்காய் + பப்பாளி :
2 ஸ்பூன் நெல்லிக்காய் சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் மசித்த பப்பாளிக் கூழ் ஒரு ஸ்பூன் கலந்து முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள். முகம் அற்புதமாய் டாலடிக்கும்.
நெல்லிக்காய்+தேன்+தயிர் :
இது வெயிலினால் உண்டாகும் கருமையைப் போக்கும், நிறத்தை அதிகரிக்கச் செய்யும்.
நெல்லிக்காய் சாற்றினில் தேன் 1 ஸ்பூன் மற்றும் 1 தயிர் கலந்து முகத்தில் தடவுங்கள்.
காய்ந்ததும் கழுவுங்கள்.
நெல்லிக்காய்+ சர்க்கரை + பன்னீர்
இது எண்ணெய் சருமத்திற்கு கிடைத்த அருமையன தீர்வாக இருக்கும். இறந்த செல்களை அகற்றி சருமத்தை இளமையாக வைக்க உதவுகிறது. நெல்லிக்கய சாற்றினில் சர்க்கரை கால் ஸ்பூன் மற்றும் 2 ஸ்பூன் ரோஸ் வாட்டரை கலக்கி முகம் மற்றும் கழுத்தில் தடவுங்கள். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள். முகத்தில் தோன்றும் வித்தியாசத்தை உணர்வீர்கள்