ராஜஸ்தானில் அசோக் கெலாட் மூன்றாவது முறையாக பதவியேற்றார்

ராஜஸ்தான் மாநிலத்தில் மூன்றாவது முறையாக அசோக் கெலாட் முதல்வராக பதவி ஏற்று கொண்டார்.துணை முதல்வராக சச்சின் பைலட் பதவியேற்றார்.

ராஜஸ்தானில் உள்ள 200 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 99 இடங்களை பெற்று தனி பெரும் இடத்தை பிடித்தது.99 இடங்களை பெற்ற காங்கிரஸ் கட்சி பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி ஆதரவோடு ராஜஸ்தானில் தன் ஆட்சியை பிடித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அசோக் கெலாட் மற்றும் இளம் காங்கிரஸ் கட்சியின் தலைவரான சச்சின் பைலட் ஆகியோரிடையே பெரும் போட்டி நிலவி வந்தது. கடந்த 3 நாட்களாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் முன்னிலையில் நடந்த சமாதான பேச்சு வார்த்தைக்கு பின் அசோக் கெலாட் முதல்வராகவும் , துணை முதல்வராக சச்சின் பைலட்டையும் பரிந்துரைத்தனர்.

இதை தொடர்ந்து ஜெய்ப்பூரில் உள்ள ஆல்பர்ட் மைதானத்தில் இன்று காலை 10 மணி அளவில் முதல்வர் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் ஆளுநர் கல்யாண் சிங் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவி ஏற்பு விழாவிற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி , முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் , தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தி மு க தலைவர் ஸ்டாலின் , முன்னாள் பிரதமர் எஸ் டி தேவகோவுடா , ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு மற்றும் லாலுவின் மகன் தேஜவ் சிங் யாதவ் ஆகிய முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் அசோக் கெலாட் கடந்த 2003 முதல் 2008 வரையிலும், பின் 2008 முதல் 2013 வரையிலும் என இரு முறை முதல்வராக பதவியில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.















