fbpx
RETamil Newsஅரசியல்இந்தியா

முழு ஆரோகியதுடன் இருப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் – அமித் ஷா

உடல்நல குறைவின் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாரதீய ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

கடந்த 16-ஆம் தேதி நெஞ்ஜெரிச்சல் மற்றும் சுவாச பிரச்சினை காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித் ஷா சேர்க்கப்பட்டிருந்தார். அப்போது அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழக்கப்பட்டபோது அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

பின்னர் மருத்துவமனை இயக்குனர் ரன்வீர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிட்ச்சை வழங்கப்பட்டது. இந்த சிகிச்சையால் உடல் நலம் தேரிய அவர் இன்று காலை 10.30 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.

தன் உடல் நலம் குறித்து அமித் ஷா டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார் , அதில் ” இறைவன் அருளால் நான் நல்ல ஆரோகியதுடன் இருக்கிறேன். ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இன்று வீடு திரும்பி விட்டேன் ‘ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close