fbpx
GeneralRETamil News

பெற்ற தாயே பிள்ளைகளை கொன்ற கொடூரம்! – கொரானாவை விட ஆபத்தானது வறுமை!

“நான் ஒரு தினக்கூலி. அரசின் இந்த ஊரடங்கு உத்தரவால் வருமானமில்லை. கையில் பணமில்லை. உண்ண உணவில்லை”

பா.ஜ.க.வின் யோகி ஆதித்யநாத் ஆட்சி புரியும் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உண்ண உணவில்லாமல் தனது ஐந்து குழந்தைகளை கங்கையாற்றில் தூக்கி வீசிய தாயின் வார்த்தைகள் மேற்குறிப்பிட்டவை.

எந்த ஒரு முன் திட்டமிடுதலும் இல்லாமல் நாடு முழுவதும் ஊரடங்கை அமுல்படுத்தியிருக்கும் மத்திய அரசு நோய்க்கான நிவாரணத்தை வழங்குவதிலும், நாட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் தோல்வியை தழுவியுள்ளது.

கொரானாவால் இறந்தவர்களின் எண்ணிக்கைக்கு நிகராக தினமும் பசி பட்டிணியால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே செல்கிறது.

அந்த வரிசையில் உத்திரப்பிரதேசத்தில் நடந்த இந்த சம்பவம் நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வறுமையின் கோரத்தால் பெற்ற பிள்ளைகளை ஆற்றில் எறிந்துள்ள தாயை நினைத்து வருத்தப்படுவதா? அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்குக் கொண்டிருக்கும் நாட்டின் மிகப்பெரிய வைரஸான மத்திய அரசை எண்ணி கோபப்படுவதா?

கைத்தட்ட, விளக்கேற்ற சொன்ன ஏழைத்தாயின் மகனுக்கு மூன்று வேலை இலவச உணவு வழங்க உத்தரவிடுவதில் என்னதான் சிக்கல்?

ஏழைகளின் மரணத்தில் நாட்டின் வளர்ச்சி மிளிர்கிறது!

                                                                                                                                                     #Fathima Ali

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close