fbpx
RETamil Newsஅரசியல்இந்தியா

தேவகவுடா துவங்கிய திட்டத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்!!

ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய உயரமான ரயில் பாலத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்க உள்ளார். வடகிழக்கு மாநிலங்களின் கனவு திட்டமான போகிபீல் பாலம் 21 ஆண்டு கால கட்டுமானப் பணிகளுக்கு பிறகு திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது..

கடந்த 1997-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் எச்.டி.தேவகவுடா போகிபீல் பாலத்திற்கு அடிக்கல் நாட்டிய நிலையில் 21 ஆண்டுக்கு பிறகு அப்பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். இந்த பாலம் பிரம்மபுத்திரா நதியின் மேலே சுமார் 4.98 கிலோ மீட்டர் தூரத்துக்குச் செல்கிறது. இந்த பாலம் நாட்டின் முதல் நீளமான மற்றும் உயரமான பாலமும், ஆசியாவின் இரண்டாவது நீளமான மற்றும் உயரமான பாலமும் என்ற சிறப்பை பெற்றுள்ளது.

இப்பாலத்தால் அஸ்ஸாமில் உள்ள டின்சுகுகியாவிற்கும், அருணாச்சலப் பிரதேசத்தின் நாகர்லகுன் ஊர்களுக்கும்  இடையேயான பயணம் 10 மணி நேரம் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 5 ஆயிரத்து 920 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள போகிபீல் பாலம் இந்தியாவின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

Related Articles

Back to top button
Close
Close