fbpx
RETamil Newsஇந்தியா

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியா மிகவும் சரியாக செயல்படுவதாக பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் பாராட்டு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியா மிகவும் சிறப்பாக செயல்படுவதாக பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியா கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக இந்திய முழுவதும் முதற்கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னறும் இந்த கொரோனா நோய் தொற்று குறையாமல் பரவி வருவதால் இந்த ஊரடங்கை இரண்டாவது கட்டமாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மருத்துவமனைகளில் கொரோனா நோய் தொற்று அறிகுறிகளுடன் அனுமதிக்கப்படும் பலருக்கும் இந்த நோய் தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாகவே இந்த நோய்யுனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் தற்போதுவரை 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதே போல் பலியானோரின் எண்ணிக்கை 652-ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியா சிறப்பாக செயல்படுவதாக பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனரும் , உலக பெரும் பணக்காரர்களில் ஒருவருமான பில்கேட்ஸ் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார், அதில் ” கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவர நீங்களும் உங்கள் அரசும் மேற்கொண்டு வரும் செயல்திறன் மிக்க நடவடிக்கைகளை பாராட்டுகிறேன், ஊரடங்கை அமல்படுத்தியது, பரிசோதனையை விரிவுபடுத்தியது, தனிமைப்படுத்துவதற்க்காக ஹாட்ஸ்பாட் பகுதிகளை கண்டறிந்தது உள்ளிட்ட பல நடவடிக்கைகள் பாராட்டிற்குரியவை. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஆரோகிய சேது போன்ற செயலி உட்பட தற்போதைய தொழில் நுட்பங்களை உங்கள் அரசு சிறப்பாக சிறப்பாக செயல்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது ‘ என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close