RETamil News
கஜா புயலின் காயம் மறைவதற்குள் மீண்டும் உருவெடுக்கும் பெதாய் புயல் !!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள பெதாய் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மீனவர்களின் படகுகள் அலைகளில் சிக்கி சேதமடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
சற்று நாள் முன்பே கஜா புயல் தாக்கம் ஏற்பட்டநிலையில் தற்போது வங்கக்கடலில் வலுபெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினால் 14-ஆம் தேதி மாலை முதல் 16ஆம் தேதி ஆகிய தேதி வரை தமிழக கரையோரம் மணிக்கு 75கி.மீ வேகத்தில் கற்று வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கரைகளில் காற்று பலமாக வீசும் என்பதாலும் , அலைகளும் சீற்றத்துடன் இருக்கும் என்பதாலும் படகுகள் வொன்றுடன் ஒன்று மோதி சேதமடையும் என்பதாலும் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.















