GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா
அயோத்தியில், ராமர் கோவில் கட்டுமான பணிகள் தீவிரம்…! யோகி ஆதித்யநாத் ஆய்வு!
Yogi adithyanath visted ram temple construction area

அயோத்தி :
அயோத்தியில், ராமர் கோவில் கட்டுமான பணிகளை, உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம், கடந்தாண்டு நவம்பரில் அனுமதியளித்தது.இதையடுத்து, ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளையை, கடந்த பிப்ரவரியில் மத்திய அரசு அமைத்தது.
மார்ச்சில், அயோத்தியில் பூமி பூஜை நடந்தது. கட்டுமான பணிகள், மே இறுதியில் துவங்கின. இந்நிலையில், ராமர் கோவில் கட்டுமான பணிகளை பார்வையிட, அயோத்திக்கு, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சென்றார்.
கோவில் கட்டுமான பணிகளை பார்வையிட்டு, அறக்கட்டளை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர், அயோத்தி மாவட்ட பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு, லக்னோ திரும்பினார்.
















