“காட்டு ராஜா” என்றாலே சிங்கம் தான் , அப்படியோர் ராஜாவுக்கு இன்று உலக சிங்க தினமாக கடைபிடிக்கப்படுகின்றது
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி உலக “காட்டு ராஜா” அதாவது உலக சிங்க தினமாக
கடைபிடிக்கப்படுகின்றது.
திறந்த பசுமை நிறைந்த காடுகளின் அழிவாலும் , பெரும்பாலான சிங்கங்கள் வேட்டையாடப்படுவதாலும் இன்று நம் உலகில் சிங்கங்களின் எண்னிக்கை குறைந்துள்ளது. எனவே சிங்கங்களை பாதுகாக்கவும் , அதை பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தவும் கென்யா வன உயிரின ஆர்வலர்களால் இந்த நாள் முதல் முதலில் கடைபிடிக்கப்பட்டது. பின்னர்தான் இந்த நாளின் முக்கியதுவம் அறிந்து உலகம் முழுவதும் சிங்க தினமாக இன்று கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
மன்னர்கள் காலத்திளிருந்தே சிம்மம் எனும் சொல் தலைவன் அல்லது அரசன் என்பதை குறிப்பதாகும். அப்படி ஓர் காட்டு தலைவனை அந்த காலத்திலிருந்தே ராஜாக்களும் வேட்டையாடி வந்ததாலும் அதன் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளதாக தகவல்கள்.
எனவே உலகில் ஒரு நூற்றாண்டு முன்பு வரை 2 லட்சமாக இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை தற்போது வெறும் 20 ஆயிரமாக குறைந்துள்ளது.அதுவும் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை 500-க்கும் மேல் குறைந்துள்ளது.
அதை நாம் சரிசெய்ய வேண்டும் என்றால் பசுமை நிறைந்த காட்டையும் , வன உயிர்களையும் காப்பாற்றவேண்டும் இதனால் இயற்கையுள் சம நிலை அடையும் நாமும் நமக்கு தேவையான நீர்,காற்று,ஆரோக்கியம் ஆகியவற்றினை பெறலாம்.