fbpx
BusinessREஉலகம்

மிகப்பெரும் பெட்ரோலிய உற்பத்தி குறைப்பு ரஷ்யா சவூதிஅரேபியா இடையே ஒப்பந்தம் : மீண்டும் விலை உயரும் அபாயம்!

ரஷ்யா-சவூதி அரேபிய நாடுகள் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் விலை மீண்டும் கூடத்தொடங்கியுள்ளது.

வரும் 2020 மே மாதத்தில் இருந்து இரு நாடுகளும் சேர்ந்து 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாள் ஒன்றுக்கு 97 லட்சம் பேரல்கள் உற்பத்தி செய்வதைக் குறைத்துக்கொள்வதாக அறிவித்துள்ளன. இந்த ஒப்பந்தத்தால் அமெரிக்காவின் பிரண்ட் கச்சா எண்ணெய் 7.7 சதவீதம் உயர்ந்து 24.52 டாலராகவும், ஆசியச் சந்தையில் பிரண்ட் எண்ணெய் 33.08 டாலராகவும் அதிகரித்து காணப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கச்சா எண்ணெய் உபயோகத்தின்  முக்கிய நாடுகளில் உபயோகம்  குறைந்ததால் விலையும் சரிந்தது வந்தது. ஆனாலும், சவூதி அரேபியாவும், ரஷ்யாவும் தங்களுக்கு இடையிலான விலைப் போட்டியால் இரு நாடுகளும் உற்பத்தியை அதிகரித்து வந்ததால் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் நாளுக்கு விலை அடிமட்டத்துக்குச் சென்றது. இதனால் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 18 டாலர் வரை குறைந்தது.

இதனால் மற்ற எண்ணெய் உற்பத்தியாளர்கள் ரஷ்யாவும், சவூதி அரேபியாவும் விலைப் போரில் ஈடுபட வேண்டாம். உற்பத்தியைக் குறையுங்கள் என்று கோரிக்கை விடுத்து வந்தன.

இதையடுத்து, வியன்னாவில் எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நாடுகள் என அழைக்கப்படும் ஒபேக் அமைப்பும், ரஷ்யாவின் சார்பில் அதிகாரிகளும் நேற்று காணொலி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் மே மாதத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு 97 லட்சம் கச்சா எண்ணெய் பேரல்கள் உற்பத்தியைக் குறைத்துக்கொள்வதாக இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது என மெக்ஸிகோ நாட்டின் பெட்ரோலியத்துறை அமைச்சர் ரோசியா நாலே அறிவித்தார்..

ஒபேக் நாடுகளின் பொதுச்செயலாளர் முகமது பர்கின்டோ இந்த ஒப்பந்தம் குறித்துக் கூறுகையில், ரஷ்யா, சவூதிஅரேபியா இடைய ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் வரலாற்றுச் சிறப்புமி்க்க ஒப்பந்தமாகும். 2 ஆண்டுகளுக்கு மிகப்பெரிய அளவில் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதாவது 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இந்த உற்பத்திக் குறைப்பு இருக்கும். ஜி20 நாடுகள் கூட்டமைப்பில் பங்கேற்றுள்ளதால், மற்ற நாடுகளின் நலனையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது  எனத் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியா பெட்ரோலியத்துறை அமைச்சர் அப்துல்லா அஜிஸ் பின் சல்மான் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார். அவர் கூறுகையில், “ ரஷ்யா, அல்ஜீரியாவுடன் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையும் ஒப்பந்தமும் கருத்தொற்றுமையின் அடிப்படையில் சுமூகமாக  முடிந்தது எனத் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close