fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாஉலகம்

இது எப்படி இருக்கு..? இந்தியாவில் கொரோனா ரொம்ப குறைவாம்…!

WHO opinion india corona dead rate

ஜெனீவா:

உலகிலேயே இந்தியாவில்தான் கொரோனாவால் பலி குறைவு என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகளவில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91 லட்சத்தை கடந்துவிட்டது. பலியானவர்களின் எண்ணிக்கை 4.79 லட்சம் பேராக உள்ளது.

அதே போல இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 4.4 லட்சமாகவும் பலி எண்ணிக்கை 14,323 ஆகவும் இருக்கிறது. ஆனால் உலகளவில் இறந்தவர்களை விட இந்தியாவில் கொரோனா பலியானவர்களின் இறப்பு விகிதம் குறைவு என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

1 லட்சம் பேரில் ஒருவர் தான் இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழக்கிறார் என்று கூறி உள்ளது. இது உலக அளவில் ஒப்பிட்டால் இந்த விகிதம் 6.06 ஆக உள்ளது. அதிகபட்சமாக  இங்கிலாந்தில் 63.13 சதவீதம் உள்ளது. ஸ்பெயினில் 60.60, இத்தாலியில் 57.19 ஆக இறப்பு விகிதம் ஆகும்.

அமெரிக்காவில் .36.30, ஜெர்மனியில் 27.32, பிரேசிலில் 23.68, கனடாவில் 22.48, ஈரானில் 11.53, ரஷ்யாவில் 5.62 ஆகவும் உள்ளது. இது வருங்காலங்களில் அதிகரிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறி உள்ளது.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close