fbpx
GeneralRETamil Newsworld

டிக்டாக், வீசாட் ஆகிய செயலிகளுக்கு தடை விதித்தார் டிரம்ப்…! அதிரடி அறிவிப்பு!

USA trump announces ban on tiktok

வாஷிங்டன்: சீன நிறுவனத்தின் டிக்டாக், வீசாட் ஆகிய செயலிகளுக்கு தடை விதித்து அமெரிக்க அதிபர்  டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சீனாவின் டிக்டாக், வீசாட் உள்பட 106 செல்போன் செயலிகளால் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி இந்தியா முதன்முதலில் தடை விதித்தது. இந்தியாவின் இந்த செயலை அமெரி்க்க அரசும், குடியரசுக் கட்சி எம்.பி.க்களும் வெகுவாக பாராட்டினர்.

அமெரிக்காவிலும் விரைவில் டிக்டாக், வீசாட் உள்ளிட்ட செயலிகளுக்கு தடை விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப், வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்திருந்தனர். இந் நிலையில் நேற்று தடை உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த தடை உத்தரவு குறித்து அதிபர் டிரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவில், சீன நிறுவனங்கள் உருவாக்கிய செல்போன் செயலிகள் அமெரிக்காவில் பரந்து கிடக்கின்றன. இந்த செயலிகளால் தேசப் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை, நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் உள்ளது என தெரியவந்துள்ளது என்று அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close