RETamil Newsதமிழ்நாடு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் கசிவு: 2 தொழிலாளர்கள் படுகாயம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமில கிடங்கின் வாழ்வை திறக்கும் பொழுது லேசான கசிவு ஏற்பட்டு இரண்டு தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து தற்போது வரை 99 சதவீதமான ரசாயனப் பொருட்கள் வெளியேற்றப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
தற்போது இறுதிகட்ட பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இன்று ரசாயன கழிவுகளை அகற்ற ஈடுபட்டிருந்த பாலசுப்பிரமணியன், ஜெயசங்கர் ஆகியோர் மீது கந்தக அமிலம் தெரிந்ததில் இரண்டு பேரும் படுகாயமடைந்தனர்.
அவர்கள் இருவரும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.