fbpx
RETechnologyவாகனங்கள்

நார்ட்டன் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தை கைப்பற்றியது டிவிஎஸ்!

இங்கிலாந்தை சேர்ந்த பிரசத்தி பெற்ற நார்ட்டன் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தினை தமிழகத்தின் டிவிஎஸ் மோட்டார் ரூ.153 கோடி  மதிப்பீட்டில் தன்னகப்படுதிகொண்டது..

இதற்கு முன்பு  நார்ட்டன் நிறுவனம் கைனெடிக் நிறுவனத்துடன் இனைந்து இந்தியாவில் தனது மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில்,

அந்நிறுவனம் நிதி சிக்கல்களால் வீழ்ச்சி அடைந்தது.

இந்நிலையில் இந்நிறுவனத்தை முழுமையாக 16 மில்லியன் பவுண்டுகள் மதிப்பீட்டில் டிவிஎஸ் கையகப்படுத்தியுள்ளது.

ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்நிறுவன மாடல்களின் விற்பனையை மேலும் அதிகரிக்கவும், தொடர்ந்து தற்போது விற்பனை செய்யப்படுகின்ற இந்நிறுவனத்தின் பாரம்பரியத்தை மாறாது கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் சுதர்சன் வேணு கையகப்படுத்துதல் பற்றி கூறுகையில், “இது டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தின் எங்களுக்கு மிக முக்கியமான தருணம் இது என்றார்.

நார்ட்டன் உலகெங்கும் கொண்டாடப்படும் ஒரு சின்னமான பிரிட்டிஷ் பிராண்ட் மற்றும் உலக அளவில் எங்களுடைய வர்த்தகத்தை விரிவுப்படுத்த ஒரு மகத்தான வாய்ப்பை எங்களுக்கு கொடுக்கும்.

மேலும் அவர் கூறுகையில்,

“நார்ட்டன் தனது தனித்துவமான அடையாளத்தை அர்ப்பணிப்பு மற்றும் வணிகத் திட்டங்களை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும் என உறுதிபட கூறியுள்ளார்.

நார்ட்டன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் 1898 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. இந்நிறுவனம் ஆடம்பர மோட்டார் சைக்கிள்களை தயாரிப்பதில் மிகவும் பிரபலமானது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close