fbpx
REஅரசியல்உலகம்

உலக சுகாதார அமைப்பு (WHO) மீது டிரம்ப் விமர்சனம்

Trump criticize World Health Organization!

உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், மனிதர்களை பெரும் அளவில் பலி வாங்கிக் கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் மாகாணத்தில் தொடங்கிய இந்த வைரஸ், இன்று உலகம் முழுக்க பரவி உள்ளது. இது குறித்து ட்ரம்ப் தொடர்ந்து சீனாவின் மீது விமர்சனம் செய்து வருகின்றார்.

இந்நிலையில் அவர் உலக சுகாதார அமைப்பு( WHO) மீது விமர்சனம் செய்துள்ளார். அதில் அவர் நாங்கள் உலக சுகாதார அமைப்புக்கு 400 முதல் 500 மில்லியன் டாலர்கள் நிதி வழங்குகிறோம். ஆனால், சீனா 38 மில்லியன் டாலர்கள் மட்டும் நிதி வழங்குகிறது. அப்படியிருக்கையில், அவர்கள் சீனாவுக்கே வேலை செய்கின்றனர். மேலும் சீனாதான் நோயை உலகெங்கிலும், பரப்பியது. இந்த நோய் தொற்று பரவும் வேளையில், விமானங்கள் மற்ற நாடுகளுக்கு செல்ல அனுமதித்தது சீனாவின் தவறு’ என்று குற்றஞ்சாட்டினார்.

இந்த கொரோனா வைரஸால் உலகெங்கிலும் 2 லட்சத்தும் அதிகாமானோர் பலியாகியுள்ள நிலையில், 55,000க்கு அதிமானோர் அமெரிக்காவில் மட்டும் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close