fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

மின் கட்டண நிர்ணயத்துக்கு எதிரான வழக்கு..! சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று தீர்ப்பு!

TNEB reading case judgement today

சென்னை:

மின் கட்டண நிர்ணயத்துக்கு எதிரான வழக்கில் இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் தீர்ப்பு வெளியாகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 3 மாதங்களாக மின்சார கணக்கீடு எடுக்கப்படவில்லை. அதன் பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்டபின் மின்சார ரீடிங் எடுக்கப்பட்டது.

ஆனால் ஊரடங்கு தளர்த்தப் பட்ட பின் எடுக்கப்பட்ட கணக்கீட்டில் பல மடங்கு மின் கட்டணம் அதிகமாக வந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து நடிகர் நடிகைகள் உள்பட பலர் தங்களது சமூக வலைதளங்களில் தங்களது ஆதங்கத்தை தெரிவித்தனர்.

இந் நிலையில் ஊரடங்கு காலத்தில் முந்தைய மின் கட்டண தொகை அடிப்படையில் புதிய கட்டணம் நிர்ணயிக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது

வழக்கின் விசாரணையின் போது அதிக மின் கட்டணத்தை மின் வாரியம் வசூலிக்கவில்லை என்றும் ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்ததால் மின் கட்டணம் அதிகமாக இருக்கும் என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்தது.

இந் நிலையில் வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது. மின் கட்டண நிர்ணயத்துக்கு எதிரான வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளிவர இருக்கிறது.

Tags

Related Articles

Back to top button
Close
Close