fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

நீங்க சொல்றதை கேட்கிறோம்…! டிக்டாக் விவகாரத்தில் இந்தியாவிடம் சமாதானம் செய்யும் சீனா!

Tiktok accepts Indias rules

டெல்லி:

இந்தியா கூறும் விதிகளுக்கு உட்பட்டு செயல்பட தயாராக இருப்பதாக டிக் டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

லடாக்  பிரச்னைக்கு பிறகு, இந்தியா – சீனா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சீன நிறுவனங்களான இவை, பயனாளர்களின் தனிப்பட்ட தரவுகளை சீனாவுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்ற அச்சம் எழ, அந்த செயலிகளுக்கு  தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்தது.

அதன்படி, ‘டிக் டாக், ஹெலோ  உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்து. கூகுள், ஆப்பிள் ப்ளே ஸ்டோரிலிருந்து டிக்டாக் செயலி அதிகாரப்பூர்வமாக இன்று நீக்கப்பட்டது.

இது குறித்து டிக் டாக் நிறுவனத்தின் இந்திய பிரிவு கூறி உள்ளதாவது:  தனி நபர் தரவுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் இந்திய சட்டங்களுக்கு இணைந்து தொடந்து செயல்பட தயாராக உள்ளோம்.

இந்திய பயனாளர்களின் எந்த ஒரு தரவுகளையும் பகிர்ந்து கொள்வது கிடையாது. தனி நபர் அந்தரங்க தகவல்களுக்கு முக்கியத்துவம் அளிப்போம் என்று தெரிவித்துள்ளது.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close