fbpx
GeneralRETamil Newsஇந்தியா

தேர்வுகள் நடந்தால் தான் பட்டம் வழங்கப்படும்- யூ.ஜி.சி!

There will be exams for final years

கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்த வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு எனப்படும் யூ.ஜி.சி தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் முதலியவை இன்னும் திறக்கப்படவில்லை. பல மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளை ரத்து செய்தும், இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்த வேண்டும் என ஏற்கனவே கூரப்பட்டிருந்தது.

இந்நிலையில் வரும் செப்டம்பர் 30க்குள் அணைத்து பல்கலைக்கழக இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகளை நடத்த வேண்டும் என யூ.ஜி.சி தெரிவித்துள்ளது.

மேலும் யூ.ஜி.சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா ” பட்டங்கள் வழங்க யூ.ஜி.சிக்கு மட்டுமே உரிமை உள்ளது; மாநிலங்கள் ரத்து செய்யும் தேர்வுகளுக்கு யூ.ஜி.சி எவ்வாறு பட்டம் வழங்கும்; தேர்வுகள் நடத்தப்படாமல் பட்டம் வழங்க வாய்ப்புகள்  இல்லை; எனவே மாணவர்கள் தேர்வுகளுக்கு தயாராக வேண்டும்.” என அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால், அது யூ.ஜி.சி நெறிமுறைகளுக்கு எதிர் விளைவுக்களை ஏற்படுத்துமா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close