fbpx
உலகம்

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகல்!!!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இருந்து விலகுவதாக அமெரிக்கா திடீரென அறிவித்துள்ளது.

மெக்சிகோ பிரச்சினையில் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அமெரிக்கா விலகுவதாக அறிவித்து உள்ளது.

ஐநா சபைக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே, வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ ஆகியோர் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர். அப்போது பேசிய நிக்கிஹாலே, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் கேலிக்குரியதாக செயல்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஐநா மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகுகிறது என்று தெறிவித்தார்.

மனித உரிமை ஆணையத்தை சீரமைக்க அமெரிக்கா செய்த முயற்சிகளுக்கு ரஷ்யா, சீனா, கியூபா, எகிப்து போன்ற நாடுகள் முட்டுக்கட்டை போட்டதாகவும் நிக்கி ஹாலே குற்றம் சாட்டி உள்ளார்.

சமீப காலமாக, மெக்ஸிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடியேறுபவர்களைத் தடுக்கும் விதமாக குறிப்பிட்ட வயதினருக்கு மேல் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் இந்த செயல், பெற்றோரிடம் இருந்து பிள்ளைகளை பிரித்து வைக்கும் செயல் என்று ஐ.நா. சபையின் மனித உரிமை கவுன்சில் கண்டனமும் தெரிவித்து இருந்தது.

அதுபோல இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையேயான காஸா பிரச்னை தொடர்பாக ஐ.நா. சபையில் இஸ்ரேலுக்கு எதிராக நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

இந்த நிலை தொடர்ந்தால் ஐ.நா. சபை மனித உரிமை கவுன்சிலில் இருந்து வெளியேறி விடுவோம் என அமெரிக்கா ஏற்கனவே கூறியிருந்த நிலையில் தற்போது  வெளியேறுவதாக அறிவித்து உள்ளது.

அமெரிக்க அதிபராக பதவி ஏற்றபிறகு, ஏற்கனவே டிரம்ப் யுனெஸ்கோ அமைப்பில் இருந்தும், பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்தும் அமெரிக்கா வெளியேறிய நிலையில், தற்போது மனித உரிமை கவுன்சிலில் இருந்தும் வெளியேறி உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close