RETamil Newsதமிழ்நாடு
மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம்:சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!!

சென்னை: அடுத்த சில நாட்களுக்கு தென் மேற்கு அரபிக் கடலுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வுபகுதி புயலாக மாறி அதற்க்கு சாகர் எனப்பெயரிடப்பட்டது.
வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அரபிக்கடலில் நிலவுவதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.