fbpx
REஅரசியல்உலகம்

சீனாவை எதிர்க்கும் உலக நாடுகள் -நடப்பது என்ன ?

The countries which are against china

சீனாவில் இருந்து இந்தியாவிற்கு வந்த ராபிட் டெஸ்ட் கருவிகள் தவறான சோதனை முடிவுகளை காட்டியதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் இந்தியா, “சீனா தங்களுக்கு அனுப்பிய கருவிகளை திருப்பி அனுப்பும் முடிவுக்கு வந்துள்ளது”. இதனால் சீனாவிடம் பலவிதமான கேள்விகளை எழுப்பி உள்ளது இந்தியா. இதனை தொடர்ந்து சீனாவுடன் வர்த்தகம் செய்ய உலக நாடுகள் பல தயங்குகின்றன என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

இந்த பிரச்சனை இந்தியாவுடன் மட்டும்  முடியவில்லை. ஐரோப்பிய நாடுகளும் இந்த நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன. சீனாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மருத்துவ பொருட்களின் தரம் குறைந்துள்ளதாக ஐரோப்பிய நாடுகள் கூறியுள்ளன.இதன் விளைவாக ஐரோப்பிய நாடுகள் பல கேள்விகளை சீனாவிடம் கேட்டுள்ளன.

கொரோனா எவ்வாறு தோன்றியது? கொரோனா வைரசின் ஆரம்ப புள்ளியை கண்டறிய வேண்டும் என்று ஆஸ்திரேலியா கூறியுள்ளது. இதற்கு பதிலளித்த சீனத் தூதர், ஆஸ்திரேலியா தயாரிப்புகளை இனி சீனா அனுமதிக்காது, அவற்றை நாங்கள் புறக்கணிப்போம் என கூறினார். இதனால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

சீனா சுமார் 16 ஆயிரத்து 500 கோடி டாலர் இழப்பீடு அமெரிக்காவிற்கு வழங்க வேண்டும் என டிரம்ப் கூறியுள்ளார். கொரோனா சேதத்துக்கு சீனா பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அமெரிக்க ஊடகம் ஒன்று டிரம்பிடம் கேட்ட போது, இதை விட அதிக தொகையை சீனாவிடம் கேட்க உள்ளதாக கூறினார்.

கொரோனா வைரஸ் தோன்றியது எப்படி உள்ளிட்ட பல கேள்விகளுக்கு சீனா பதில் அளித்தால் மட்டுமே உலக நாடுகள் அதிலிருந்து மீண்டுவர இயலும் என ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்கல் கூறியுள்ளார்.

பல நாட்டின் தலைவர்களும் நிறைய கேள்விகளை சீனாவிடம் முன்வைக்கின்றனர். இந்த கேள்விகளுக்கு தனது செவிகளை சாய்க்க மறுக்கின்றது சீனா. இதனால் பல நாடுகள் சீனாவின் மீது கோபம் கொண்டுள்ளனர்.

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close