fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

கேரளாவில் 1000க்கும் மேற்பட்ட கோவில்கள் வரும் 17ம் தேதி முதல் திறப்பு…! பக்தர்களுக்கு அனுமதி!

Temple will be open from 17th in kerala

திருவனந்தபுரம்:

கேரளாவில், சபரிமலை ஐயப்பன் கோவில் தவிர, மற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள், வரும், 17ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன.

இது குறித்து, திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர், என். வாசு கூறியதாவது: வரும், 17ம் தேதியன்று, மலையாள புத்தாண்டு பிறக்கிறது. அன்று, கேரளாவில், சபரிமலை ஐயப்பன் கோவில் தவிர்த்து, மற்ற கோவில்கள் அனைத்தும், பக்தர்கள் தரிசனத்திற்கு திறக்கப்படும். கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

10 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் மற்றும் முதியோர்கள் கோவிலுக்கு வர வேண்டாம். 5 மாதங்களாக கோவில்கள் மூடப்பட்டதால் வாரியத்திற்கு 400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

கேரளாவில், திருவாங்கூர் தேவசம் போர்டு, சபரிமலை ஐயப்பன் கோவில் உட்பட, ஆயிரத்திற்கும் அதிகமான கோவில்களை நிர்வகித்து வருகிறது. ஊரடங்கு காரணமாக 5 மாதங்களாக கோவில்கள் மூடப்பட்டதால், தேவசம் போர்டு, அதன், 3,500க்கும் அதிகமான ஊழியர்களுக்கு ஊதியம் தர முடியாமல், திணறி வருகிறது.

இந் நிலையில், ‘ஆன்லைன்’ மூலம் பதிவு செய்து, கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் அளிப்போரை மட்டும் சபரிமலை கோவிலுக்கு அனுமதிக்க, தேவசம் வாரியம் திட்டமிட்டது. ஆனால், ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்ததால், கோவில் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது.

குருவாயூர் கோவிலில், தினமும், 5 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைத்து வந்தது. ரொக்கம் மட்டுமின்றி, தங்கம், வெள்ளி, வைரம் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களும் காணிக்கையாக கிடைக்கும். இக்கோவிலும் ஆன்லைன் சேவை மூலம், வருவாய் ஈட்ட முயன்றது. ஆனால், பக்தர்கள் ஆர்வம் காட்டவில்லை.

Tags

Related Articles

Back to top button
Close
Close