fbpx
RETamil News

சிறுமி ஹாசினியை கொன்ற கொலைகாரன் தஷ்வந்த் மேல்முறையீட்டு மனு: இன்று தீர்ப்பு!

போரூர் சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி தஷ்வந்த் மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

சென்னை போரூரை அடுத்த மதனந்தபுரத்தை சேர்ந்த பாபுவின் 6 வயது மகள் ஹாசினி , 2017ல் பிப்ரவரி மாதம் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென்று காணாமல் போனார். இது குறித்து மாங்காடு போலீசில் அவரது பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அதே குடியிருப்பில் குடியிருக்கும் தஷ்வந்த் என்ற வாலிபர், அந்த குழந்தையை தன் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் கொடுமை செய்து, கொலை செய்ததும், பின்னர் காட்டிற்குள் எடுத்து சென்று எரிக்க முயன்றதும் தெரியவந்தது.

பிறகு தனது தாயையும் நகைக்காக கொலைசெய்து தப்பிச்சென்றான்.

தப்பியோடிய  தஷ்வந்தை போலீசார் மும்பையில் கைது செய்தனர். இந்த கொலை வழக்கு செங்கல்பட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, தஷ்வந்துக்கு தூக்குதண்டனையை விதித்து, கடந்த பிப்ரவரி 19-ந்தேதி தீர்ப்பு அளித்தார்.

தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதால், தூக்குத் தண்டனையை ரத்து செய்து, தன்னை விடுவிக்க வேண்டுமென தஷ்வந்த் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தையே பரபரப்புக்குள்ளாகிய இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

Related Articles

Back to top button
Close
Close