fbpx
RETamil Newsஉலகம்

மனிதர்களுக்கே செருப்பில்லாத போது, நாய்களுக்கு “ஷு ” போடவேண்டுமாம் ! என்று கூறுகிறது சுவிட்சர்லாந்து காவல்துறை

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சூரிக் நகரில் வெப்ப அலைகளில் தாக்கம் அதிகமாக இருப்பதால் நாய்களையும் பாதுகாக்க அவைகளுக்கு “ஷு ” அணிவிக்கவேண்டும் என்று கூறுகிறது அந்நாட்டின் காவல்துறை.

 

ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் தற்போது காற்றில் வெப்ப அலைகள் வீசி வருகின்றது.இந்த தாக்கத்தின் அளவு கடந்த 1864-ஆம் ஆண்டை விட அதிகமாக உள்ளது.
“ஹாட் டாக் கேம்பைன் ‘ என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை சூரி நகரின் காவல்துறை தொடங்கியது.

இதில் கூறியதாவது ; தற்போது அதிகஅளவில் வெப்பம் இருப்பதால் சாலைகளில் உள்ள நடைபாதை மிகவும் சூடாகி இருக்கும் அதனால் பொதுமக்கள் தன் நான்கு கால் நண்பர்களை வெளியே அழைத்துச்செல்லும் போது முதலில் தன் கைவிரல்கலால் தரையை 5 நொடி வரை தொடர்ந்து வைத்து பார்க்கவேண்டும்.

வெப்பத்தின் அளவு 30 டிகிரி செல்சியஸ் என்பது காலூன்றி நடக்கும் நாய்களுக்கு அது 50 டிகிரி – 55 டிகிரி செல்சியஸ்சாக தெரியும் அது மிகவும் அதிகம் என்பதால் அவைகளுக்கு “ஷு ” அணிவித்து வெளியே செல்ல வேண்டும் என்று அந்நாட்டு காவல் துறை பரிந்துரைத்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close