fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

வேறு வழி இல்ல… கொரோனாவோடு வாழ வேண்டியது தான்…! ஷாக் தந்த மத்திய அமைச்சர்!

Minister nitin gadkari says to live with corona virus

டெல்லி: கொரோனா வைரசுடன் வாழும் கலையை நாம் கற்று கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறி உள்ளார்.

சீனாவில் உகான் நகரில் தோன்றி இன்றைக்கும் உலக நாடுகளை ஆட்டி படைத்து வருகிறது கொரோனா வைரஸ். அதன் பாதிப்பு 200க்கும் மேற்பட்ட நாடுகளில் இருக்கிறது.

உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் நிற்கவில்லை. இந்தியாவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 50 நாட்களுக்கும் மேலாக தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது. வரும் 17ம் தேதியுடன் முடிய இருக்கும் அந்த ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந் நிலையில் நாம் அனைவரும் கொரோனா வைரசுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறி உள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது:

கொரோனா ஒரு இயற்கை வைரஸ் அல்ல. இது  ஆய்வகத்தில் உருவான ஒரு செயற்கை வைரஸ்.  இப்போது உலகம் முழுவதிலும் உள்ள பல நாடுகள் தடுப்பூசி ஆராய்ச்சியில் இறங்கி இருக்கின்றனர்.

தடுப்பூசி விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதற்கான தீர்வைக் கண்டுபிடித்த பிறகு, நாம் நம்பிக்கையை உருவாக்க முடியும். ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் பிறகு எந்த பிரச்சினையும் இருக்காது. கொரோனா வைரசோடு, பொருளாதார யுத்தத்தையும் எதிர்த்து போராட  வேண்டும். நாம் ஒரு ஏழை நாடு என்றார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close