GeneralRETamil NewsTrending Nowஇந்தியா
அரியானாவில் 3.5 ரிக்டரில் லேசான நிலநடுக்கம்…! அதிகாலையில் அலறியடித்து ஓடிய மக்கள்!
Hariyana jolts mild earthquake

சண்டிகர்:
அரியானாவில் இன்று அதிகாலை 3.5 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அரியானா மாநிலத்தின் ரோட்டக் பகுதியில் இன்று அதிகாலை 1.50 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் 3.5 ரிக்டர் அளவுகோலில் பதிவானது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
















